search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்யுக்தா ஹெக்டே"

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.

    விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.



    அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar

    அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தனிஒருவன் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். #JR24 #JayamRavi #HiphopTamizha
    அடங்கமறு படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது.


    இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆதி முன்னதாக ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.



    மேலும் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது. #JR24 #JayamRavi #KajalAggarwal #HiphopTamizha

    போகன், நெருப்புடா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருண், பப்பிக்காக சம்யுக்தா ஹெக்டேவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Varun #SamyukthaHegde
    போகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். 'காக்கா முட்டை' மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் 'பப்பி' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வருண். இதில் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    சம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர். பல்வேறு கதைகளை கேட்ட சம்யுக்தா, இறுதியாக 'பப்பி' என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். இயக்குனர் நட்டுதேவ் காக்கா முட்டை இணை இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். 'பப்பி' கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.
    கிரிக் பார்டி படம் மூலம் மிகவும் பிரபலமான சம்யுக்தா ஹெக்டே, தற்போது நட்டு தேவ் இயக்கும் பப்பி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிரார். #SamyukthaHegde
    கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததுடன் அவரின் நடிப்பும் பெரியளவில் பேசப்பட்டது. தொடர்ந்து கன்னடத்தில் நடித்த அவர் கிரிக் பார்டி படத்தின் ரீமேக் மூலம் தெலுங்கில் களம் கண்டார். தற்போது அறிமுக இயக்குநர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

    நட்டு தேவ் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தமிழில் நடிக்க பல கதைகள் வந்த போதும் தவிர்த்து வந்த அவர் நட்டு தேவ்வின் திரைக்கதை பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார்.

    படத்தின் தலைப்பிற் கேற்றவாறு ஒரு நாயை மையமாக வைத்துக் கதை பயணிக்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் நடைபெற்றபோதே திரைக்கதை குறித்து இயக்குநர் குழு சம்யுக்தாவிடம் விளக்கியதால் வசனங்களை ‘ப்ராம்ட்’ செய்யாமல் பேசி வருகிறார்.
    ×